2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுதானியச் செய்கை பாதிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மே மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதென முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர பாரிய நீர்ப்பாசன குளங்களின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை உப உணவுப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு திட்;டங்களினூடாக நிலக்கடலை, எள்ளு போன்ற பயிர்;களும் பயிரிடப்பட்டிருந்தன.

கடந்த மாதம் பெய்த மழையால் அதிகளவான பயிர்கள் அழிவடைந்துள்ளன. முத்தையன்கட்டு, துணுக்காய், ஒட்டுசுட்டான் ஆகிய விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் சிறுதானியச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதங்களான பயிர்கள் மழை வெள்ளத்தால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .