Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 05 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறினர்.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதுடன், காணி உரிமையாளர்களான யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க மூன்று காணி உரிமையாளர்களும் காலை 7 மணிக்கு விகாரை அமைக்கப்படும் இடத்துக்கு முன்பாக வந்து அமர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago