2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து வங்காலைக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05)  மாலை இடம்பெற்ற விபத்தில், 55 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் வங்காலை பகுதியில் மாடு மேய்த்து விட்டு, தள்ளாடி பிரதான வீதியூடாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கெப் ரக வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவ்வீதியால் பயணித்தவர்களின் உதவியுடன் குறித்த சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிக்கோ உற்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

கெப் ரக வாகனத்தின் சாரதியையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X