2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கரையொதுங்கிய மனித உருவம்

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார், ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை கரையொதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (10) மாலை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர், இன்று குறித்த இடத்துக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மீட்கப்பட்ட மரத்தினால் செதுக்கப்பட்ட குறித்த மனித உருவம் கொண்ட சிலை, சுமார் 5 ½ அடி உயரம் கொண்டதாகவும் மிகவும் பழைமை வாய்ந்ததாகவும் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர், மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .