Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 11 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஐயன்கன்குளம் கிராமத்தில் அடிப்படை தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையால் சுமார் 361 குடும்பங்களைச் சேர்ந்த 750 மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கிராமத்துக்கான பிரதான வீதி முதற்கொண்டு ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்தவித புனரமைப்பு பணிகளுமின்றிக் காணப்படுகின்றன.
அத்துடன், போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இக்கிராமங்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைவிட மருத்துவ வசதி, மேலதிக கல்வி வசதி என்பவற்றைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து வந்த போதும் தமது கோரிக்கை எதனையும் உரிய அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை எனவும் தொடர்;ந்தும் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago