Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியாவில் இன்புலுவன்சா நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானத்துடன் இருத்தல் வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண்னொருவர் அணமையில் இறந்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில், அது குறித்து உண்மை நிலையினை அறியும் பொருட்டு வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இருந்து கர்ப்பிணி பொண்ணொருவர் வைத்திய நிபுணர் இன்மை காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போதே ஆபத்தான நிலையை எட்டியிருந்தார். எனினும், நாம் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோது, அப்பெண் இன்புலுவன்சா எச்1என்1 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்தது.
இன்புலுவன்சா எச்1என்1 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி 48 மணிநேரம் கடந்திருந்தமையினால் எமது சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.
இவ்வைரஸ் கர்ப்பிணி பெண்களுக்கும் சலரோக நோயாளிகளையும் தாக்குமாயின் ஆபத்தானது. அத்துடன் இந்நோய்க்கான காரணங்களாக தொண்டை கரகரப்பு, முகம் சிவத்தல், நீர் போன்ற திரவம் மூக்கால் வடிதல், சுவாசிப்பதற்கு சிரமப்படுதல் போன்றவை காணப்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் பட்சத்திலும் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெறுவது சிறந்தது.
அவ்வாறு சிகிச்சை பெற தவறும் பட்சத்தில் 24 மணிநேரத்தில் இதன் தாக்கம் அதிகரித்து சுவாசப்பகுதி சேதமடைவதுடன் 48 மணிநேரத்தின் பின்னர் ஆபத்தான நிலைக்கு செல்ல நேரிடும்.
வவுனியாவிலும் இவ் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதனால், மக்கள் இந் நோய்த் தாகம் தொடர்பில் மிக அவதானத்துடன் இருப்பது அவசியமானதாகும் என அவர் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago