Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (12) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை (12) முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப்பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும்.
இதன் அடிப்படையில் பிரதேச செயலாளர் மாகாணக்காணி ஆணையாளர் போன்ற அதிகாரிகளால் தீர்க்கப்படாத முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிணக்குகளை தீர்த்து வைப்பதற்காக காணி ஆணையாளர் நாயகம் உட்பட காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி அமைச்சு என்பவற்றை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட நடமாடும் சேவை முல்லைத்தீவில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
கொக்கிளாய் மக்களின் குடியிருப்பு காணிகளில் அத்துமீறி விஹாரை அமைத்துவரும் பிணக்கானது முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்தக்காணிக்கு சரியான தீர்வு எட்டப்படும் வரை அவ்விகாரையின் கட்டுமானப்பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி விபரங்கள் காணி உரிமையாளர்களால் தனக்கு தெரிவிக்கப்பட்டன என அவர் தெரிவித்திருந்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago