Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.தபேந்திரன்
சமூக சேவைகள் அமைச்சின் மாற்றுத்திறனாளிகளை சமூக மட்டத்தில் வைத்து புனர்வாழ்வளிக்கும் சி.பி.ஆர் வேலைத்திட்டத்தின் கீழ் முழு நாள் செயலமர்வு கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மத்திய அரசின் சமூக சேவைகள் அமைச்சின் சீ.பி.ஆர் திட்ட தேசிய இணைப்பாளர் எம்.ஆர்.சாந்தகுமார, சீ.பி.ஆர் திட்ட கிளிநொச்சி இணைப்பாளர் சு.ஜெயானந்தராஜா சமூக சேவைகள் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலர், மாவட்ட உளவள துணையாளர், 4 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த சமூக சேவைகள் அலுவலர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி அலுவலர்கள், சமூக சேவைகள் உதவியாளர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள், தொண்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சீ.பி.ஆர் திட்டத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக இச்செயலமர்வில் மீளாய்வு செய்யப்பட உள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago