Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமரின் நிதி ஒதுக்கீட்டில் தரம் ஐந்து மாணவர்களுக்கான மாதிரி பரீட்சைகள் கடந்த மூன்று வருடங்களாக கிளிநொச்சியில் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தரம் ஐந்து மாணவர்களுக்கான பரீட்சை முன்னாயத்த செயலமர்வு இவ் வருடமும் முதற்கட்டமாக ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.
மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகளை ஆசிரியர் அன்பழகன் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம் ஆகியோர் நடாத்தியிருந்தனர்.
இந்த பரீட்சை முன்னாயத்த செயலமர்வில் ஜெயபுரம், முழங்காவில் பிரதேசங்களை சேர்ந்த 23 வரையான பாடசாலைகளில் இருந்து வருகை தந்திருந்த 450 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல் கைநூலும் வழங்கப்பட்டது.
இந்த செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago