2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இளம்பெண், ஆணின் சடலங்கள் மீட்பு

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மகாகச்சக்கொடி கிராமம் மற்றும் ஈரப்பெரியகுளம் பகுதிகளிலிருந்து ஆண், இளம் பெண் ஆகியோரது சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மகாகச்சக்கொடி கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து அப்பகுதியை சேர்ந்த இசுரிகா செவ்வந்தி என்ற 20 வயதுடைய குடும்பபெண்ணின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் மனோஜ் பியந்த கேவகே என்ற 47 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .