2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உணவகங்களில் திடீர் பரிசோதனை

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தேசிய உணவு பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியாவிலுள்ள அனைத்து உணவகங்களிலும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவின் இப்பரிசோனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் உள்ள அனைத்து உணவகங்க உரிமையாளர்களுக்கும் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, தொடர்ச்சியாக கண்காணித்து வந்த சுகாதார பரிசோதகர்கள், தற்போது திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளன்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நெருப்பு காய்ச்சல் அதிகரித்துள்ளமையினாலும் உணவு பாதுகாப்பு என்ற விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் அனைத்து உணவகங்களிலும் பணியாற்றுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெருப்பு காய்ச்சல் தடுப்பு ஊசி ஏற்றப்பட வேண்டும் எனவும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே. மேஜெயா தெரிவித்தார்.

மேலும், மருத்துவ சான்றிதழ் இன்றி உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களை கடமையில் ஈடுபடுத்தும் உரிமையாளர் அகியோருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்திரவின்போரில் குருமண்காட்டுப்பகுதியில் உள்ள ஒரு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் தரமற்ற மற்றும் பாவனைக்குதவாத உணவு வகைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .