Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 14 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டுள்ள தேர்தல் மறுசீரமைப்புக்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை, தமிழ் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கின்றது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.முகைதீன் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டமைப்பின் தலைவர் வி.ஆனந்தசங்கரியின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் - முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள், மேற்படி திருத்தச் சட்டத்தை ஏற்காமல் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
'சிறுபான்மை மக்களின் தேசிய குடிசன விகிதாசாரத்துக்கு ஏற்ப நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதற்கமைய
சிறுபான்மை மக்களை பாதிக்காத வகையில் தேசிய இன விகிதாசாரத்தை அடிப்டையாகக்கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அடங்கிய யோசனையை தமிழ் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாறூக், கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அந்த யோசனை சம்பந்தமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்கான வேண்டுகோளை, கடந்த மே மாதம் 8ஆம் திகதி கோரியிருந்தும் இற்றைவரைக்கும் எமக்கு எந்த விதமான அழைப்பும் கிடைக்கவில்லை என்பது மனவருத்தமான விடயமாகும் என்ற செய்தியினை ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மேலும் எங்களுடைய கோரிக்கை இலங்கையில் வாழும் சகல இன மக்களின் தேசிய குடிசன விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் தேர்தல் மறுசீரமைப்பு உத்தரவாதம் படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைபாடாகும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago