2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

10 இலட்சம் கப்பம் கோரி சிறுவனை கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது

Administrator   / 2015 ஜூன் 14 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரின் 5 வயது மகனை கடத்தி சென்று, 10 இலட்சம் கப்பம் பெற்ற பட்டானிச்சூர் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை  வவுனியா பொலிஸார் வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (11) பாலர் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த சிறுவனை, மேற்படி சந்தேக நபர் கடத்தி சென்று 30 இலட்சம் கப்பம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுவனின் தந்தை தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியதையடுத்து, 10 இலட்சம் ரூபாயை கப்பமாக கொடுத்தால் மாத்திரமே சிறுவனை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, 10 இலட்சம் ரூபாயை அப்பகுதியிலுள்ள குப்பை மேடொன்றில் வைத்து விட்டு செல்லும் படி சந்தேக நபர் கூறியுள்ளார். இதனையடுத்து, வர்த்தகர் பணத்தை வைத்து விட்டு சென்ற பின்னர் சிறுவன் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளான்.

இதனையடுத்து, வர்த்தகர் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸில் நியைத்தில் முறைப்பாடு  செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கமைய உடனடியாக் செயற்பட்ட வவுனியா பொலிஸார், சந்தேக நபரை மறுநாள் கைது செய்ததுடன் விளக்கமறியலில் வைப்பதற்கு  நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .