2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பழையமுறிகண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

George   / 2015 ஜூலை 18 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் பழையமுறிகண்டிக் கிராமத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வினால் கிராமத்திற்கு பெரும் சூழலியல் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

48 குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் மீள்குடியேற்றம் தொடங்குவதற்கு முன்னரே பெருமளவு மணல் அகழ்வு இடம்பெற்று வந்தது.

கிராமத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், துணுக்காய் பிரதேச செயலர் ஆகியோருக்கு கிராம மக்களினால் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுவதினால் கிராமத்தினுடைய ஒரேயொரு போக்குவரத்து வீதி குன்றும் குழியுமாக மாறியுள்ளது.

பழையமுறிகண்டி ஆற்றின் காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .