Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மடு திருத்தளத்தில் அமைக்கப்பட்ட அரச மத விழா ஒருங்கிணைப்பு அலுவலகம், இன்று திங்கட்கிழமை (10) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை, கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டு குறித்த அலுவலகத்தினை வைபவ ரீதயாக திறந்து வைத்தனர்.
மடு திருத்தளத்தில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் இடம்பெறும் மடு அன்னையின் திருவிழா அரச திருவிழாவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு திருவிழா தொடர்பாக முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் ஒர் அலுவலகமாகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்ஸி டி மேல், பொலிஸ் அதிகாரிகள், திணைக்களத்தின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆவனித்திருவிழா தொடர்பான முன் ஆயத்தங்கள் தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago