Thipaan / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ரோகண கமகேயின் வாகனம் மீது செவ்வாய்க்கிழமை(11) இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஃகபே தெரிவித்துள்ளது.
வவுனி;யா நெல்லி ஸ்டார் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஃபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு வார காலத்துக்கு முன்னர், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய சுவரொட்டிகளை அகற்றிக் கொண்டிருந்த ஒருவரை, ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் தாக்கியது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அது மாத்திரமின்றி, வன்னி தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் உலருணவு பொருட்கள் மற்றும் பணம் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று விளையாட்டுக்கழகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் மத தலைவர்களுக்கும் வாக்கை பெற்றுக்கொள்வதற்காக பொருட்களை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது என கபே அமைப்புக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago