2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘21,173 வெடிபொருள்களை அகற்றப்பட்டுள்ளன’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

சார்ப் நிறுவனம், வடபகுதியில் தமது கண்ணிவெடி அகற்றும் செய்பாடுகள் மூலமாக 2016ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதிகளில், 969,670 சதுர கிலோ மீற்றர்  நிலப்பகுதியில் இருந்து ஆபத்தை தரக்கூடிய 21,173 வெடிபொருள்களை அகற்றி அழித்துள்ளதாக, அதன் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பவை தெரவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை, கிளாளி ஆகிய பகுதிகளில்  மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக குறித்த பகுதிகளை அண்மித்த கிராமங்களில் உள்ள  இளைஞர், யுவதிகளைக் கொண்டு,  குறித்த மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X