2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

22 நாட்களுக்குள் 25 டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் திங்கட்கிழமை(22) வரையிலான   22 நாட்களுக்குள் 25 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக  மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய டொங்கு ஒழிப்பு வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல்   திங்கட்கிழமை(22) மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'கடந்த 22 நாட்களுக்குள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பேர் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 9 பேரூம் மன்னார் நகரசபை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் பணங்கட்டுக்கோட்டைச் சேர்ந்த இருவரும் சௌத்பார் பகுதியைச் சேர்ந்த இருவரும் சின்னக்கடை, பெரியகடை, பெற்றா, எமில் நகர், பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஒருவர் வீதம் 9 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .