Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில், காணி இல்லாத மேலும் 22 குடும்பங்களுக்கு அரச காணியில் தலா 2 பரப்பு காணி வீதம் பகிர்தளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தெல்லிப்பளை பிரதேச செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்றபோது, இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கே இவ்வாறு காணிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இதற்காக நில அளவை திணைக்களத்தின் ஊடாக காணிகளை அளவிடும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட 22 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களின் மீள்குடியேற்றத்துக்காக வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
தற்போது பலாலிஅன்ரனிபுரம் பகுதியில், காணி அற்றவர்களுக்கு காணி வழங்கப்பட்டு, 126 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025