Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக பயிர்செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி நிறைவுறுவதற்கு முன்னதாக, வயல் நிலங்களில் கால்நடைகள் விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள்;, இதனால், பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் கூறினர்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அப்பகுதி மக்கள், இரணைமடு குளத்தின் கீழ், இவ்வாண்டு 17 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் சய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
தற்போது அறுவடைகள் மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களில், கால்நடைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இந்த நிலையில் கால்நடைகளால் தற்போது பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன எனவும் கூறினர்.
அதாவது, சிறுபோகத்தின் போது, கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப திகதி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சிறுபோக நெற்செய்கை அறுவடை முழுமை பெறாத நிலையில், கட்டுப்பாட்டு திகதியான 25ஆம் திகதிக்கு முன்னரே, கால்நடைகள் தற்போது வயல் நிலங்களில் விடப்பட்டுள்ளன
எனவே, எதிர்வரும் 25ஆம் திகதி வரை, கால்நடைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .