2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னாரில் தொடர் மழை: 26,155 பேர் பாதிப்பு

Thipaan   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 7,293 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 26,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1591 பேரும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களைச் சேர்ந்த 22,350 பேரும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேரும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 381 குடும்பங்களைச் சேர்ந்த 1197 பேரும்;, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 120 குடும்பங்களை சேர்ந்த 497 பேரும், இவ்வாறு பாதிக்கப்படுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் நானாட்டான், முருங்கன், மோட்டக்கடை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளிலும், முசலி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வேப்பங்குளம் பாடசாலையிலும், மடு பிரதேச செயலாளர் பிரிவின் தம்பனைக்குளம், பண்னை வெட்டுவான், மல்லவராயன் கட்டையடம்பன் ஆகிய கிராமங்கவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் சின்னப்பண்டிவிருச்சான், பெரிய பண்டிவிரிச்சான் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .