Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நட்டாங்கண்டல் குளம் மற்றும் அதனை அண்டிய எருவில் மற்றும் உழுவனரி ஆகிய குளங்களில் நீர் வற்றியதால் 298 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 98 வரையான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு, நாட்டாங்கண்டல், எருவில், உழுவனரி ஆகிய குளங்களில் நீர் வற்றியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின்கீழ் உள்ள சிறிய மற்றும் நடுத்தர குளங்களின் கீழ் செய்கை பண்ணப்பட்ட காலபோக நெற்செய்கைகள் பெரும்பாலும் அழிவடைந்துள்ளன.
இதில் நட்டாங்கண்டல் குளத்தின் கீழ் 119 ஏக்கர் நெற்செய்கையும், எருவில் குளத்தின் கீழ் 94 ஏக்கர் நெற்செய்கையும், உழுவனரி குளத்தின் கீழ் 85.5 ஏக்கர் நெற்செய்கையும் என 298.5 ஏக்கர் நெற்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 98 வரையான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago