2025 மே 08, வியாழக்கிழமை

2ஆவது டோஸுக்காக வந்த வயோதிபர்கள் அழைக்கழிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், செ. கீதாஞ்சன்

கிளிநொச்சியில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்த சென்ற வயோதிபர்கள், இன்று (05)  திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

ஜுலை 06திகதியும் அதனை அண்மித்த சில நாள்களிலும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது சினோஃபோம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது தடுப்பூசிக்கான திகதி, ஓகஸ்ட் 5ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட வயோதிபர்கள், இரண்மாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு, இன்று காலை 6 மணிக்கு, நுற்றுக்கணக்கான வயோதிபர்கள் சென்றிருந்தனர்.

சுமார் காலை 9 மணி வரை காத்திருந்த வயோதிபர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சம்பவ தொடர்பில் அறிந்த இராணுவத்தினர், சம்பவ இடத்துக்குச் சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது

தடுப்பூசி, சனிக்கிழமையின் (07) பின்னர் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எனவே இது தொடர்பான அறிவித்தல் சுகாதார துறையினரால் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து, வயோதிபர்களை திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தனர்.

அத்துடன், 'முதலாவது தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரே  செலுத்தினார்கள். எனவே, அவர்களே இவர்களுக்கான பதிலளிக்க வேண்டும்' சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் வயோதிப நிலையிலும் தூர இடங்களிலிருந்து வருகை தந்தவர்கள், கடும் சிரமங்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றனர்.

தங்களுக்கு முறையான அறிவித்தல்களை வழங்கியிருந்தால், கொரோனா பரவல் நெருக்கடி மத்தியிலும் வீண் அலைச்சல் இருந்திருக்காது எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X