Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள மூன்று குளங்களின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, துணுக்காய் கமநலசேவை நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள குளங்கள் பல்வேறு நிதியதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மூன்று குளங்கள் விவசாய அமைச்சினுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் இன்று துணுக்காய் கமநலசேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, சொக்கன்குளம் பகுதியில் 20 இலட்சத்து 15 ஆயிரத்து 995 ரூபாய் ஐம்பது சதத்தில் அபிவிருத்தி வேலைகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல 28 இலட்சத்து ஒன்பதாயிரத்து 826 ரூபாய் எழுபது சதம் செலவில் கரம்பைக்குளத்தினுடைய கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், 36 இலட்சத்து 11ஆயிரத்து 175 ரூபாய் செலவில் கொல்லன்குளத்தினுடைய அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி குளங்களின் கீழ் உள்ள நீர் விநியோக வாய்க்கால்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி வேலைகள் மேற்படி நிதியொதுக்கீடுகளில், முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .