2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 3 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 3,000 குடும்பங்கள் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.

முத்தையன்கட்டு, துணுக்காய், மாந்தைகிழக்கு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

முத்தையன்கட்டுக்குளம், தண்ணீர் முறிப்புக்குளம் ஆகிய இரு குளங்களின் வான் கதவுகள் திங்கட்கிழமை (29) திறந்துவிடப்படவுள்ளதால் வெள்ளப்பாதிப்புக்கள் அதிகமாகும் எனவும், அதற்கான அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு, மற்றும் உலர்உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .