2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஏ – 35 வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்மடு குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏ – 35 வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

வான் கதவுகள் திறக்கப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏ – 35 வீதியில் அமைந்துள்ள நெத்தியாலியாறு தற்காலிக பாலம் சேதமடைந்ததை அடுத்தே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நெத்தலியாறு பாலம் புனர்நிர்மானம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, பாலம் அகற்றப்பட்டு தற்காலிக பாலம் போடப்பட்டிருந்தது.

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக தற்காலிக பாலமும் சேதமடைந்தது. இதனையடுத்து, இராணுவத்தினரும் பொலிஸார், பொதுமக்கள் இணைந்து மண் மூட்டைகள் மூலம் தற்காலிக பாலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது கல்மடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால், ஏ – 35 வீதியை மேவி வெள்ளம் பாய்கின்றது. இதனால் தற்காலிக பாலம் சேதமடைந்தது.

இதனால் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .