Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
திருகோணமலை - தென்னமரவடி, வரசித்தி விநாயகர் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம், 35 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்றது.
காலையில் விநாயகருக்கு விசேட பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம் வந்ததையடுத்து, கோவிலினுடைய மரபு வழியில் விநாயகர் வீதி உலாவாக பறையன் ஆற்றிற்கு எடுத்துவரப்பட்டு, அங்கு தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, தென்னமரவடி கோவிலின் அலங்கார உற்சவம், நீண்டகாலமாக இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் சுமார் 35ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த கோவிலின் அலங்கார உற்சவம் இடம்பெற்றதுடன், மரபுவழியில் தீர்த்தோற்சவமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டிருந்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago