2025 மே 22, வியாழக்கிழமை

385kg பீடி சுற்றும் இலைகள் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியிலிருந்து, ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை நேற்று மாலை (24) மீட்டுள்ள மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

ஓலைத்தொடுவாய் பகுதியில் உள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 12 மூடைகளைக் கொண்ட 385 கிலோகிராம் நிறைகொண்ட பீடி சுற்றும் இலைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்டவர், மன்னார் - புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவரெனவும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (25) காலை ஒப்படைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரனைகளின் பின்னர் குறித்த பொதிகள், யாழ் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .