2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 4,604பேர் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் 1376 குடும்பங்களைச் சேர்ந்த 4,604பேர் இடம்பெயர்ந்து 11 தற்காலிக நலன்புரி நிலையங்களிலும்; நண்பர்கள். உறவினர் வீடுகளிலும்; தங்கியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் காரணமாக 4,673 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 906பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2105 வீடுகள் பகுதியளவிலும், 6 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. புதுமுறிப்பு பகுதியிலுள்ள 4 வீடுகளும், அம்பாள் நகர், பெரியபரந்தன் ஆகிய பகுதியை சேர்ந்த தலா ஒவ்வொரு வீடும் முற்றாக சேதமடைந்தன.

கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான சமைத்த உணவுகள் என்பன வழங்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியுடன் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .