2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘40% ஆளணியினரைக் கொண்டே சேவைகள் நகருகின்றன’

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

40 சதவீதமான ஆளணியினரைக் கொண்டே, மாவட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக, கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இவற்றில், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில், காலபோக, சிறுபோகப் பயிர்ச் செய்கையின் போது உர மானியங்களை வழங்குவதல், பயிர்செய்கைக் காலங்களில் கால்நடைகளைக் கட்டுப்படுத்துதல், ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி இல்லாமல் இருப்பதாகவும்,இருக்கின்ற ஆளணியினரைக் கொண்டே, இச்செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .