2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

415 மில்லியன் ரூபாய் மீதம்

Freelancer   / 2023 ஜனவரி 06 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்தளவு சேதன பசளையை கொள்வனவு செய்து,  ஹெக்டேயர் ஒன்றுக்கு ரூபாய் 12,500 வீதம் 29,000 ஹெக்டேருக்கும்   415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் கமநல   அபிவிருத்தி திணைக்களம்  நன்றிகளைத் தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 19,000 விவசாயிகள் 29,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் காலபோக நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக, ஒரு ஹெக்டேயருக்கு ரூபாய் 20,000 பெறுமதியான சேதனப் பசளையைக் கொள்வனவு செய்ய முடியும். ஆயினும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஒரு ஹெக்டேயருக்கு ரூபாய் 7,500 பெறுமதியான சேதனப் பசளையையே கொள்வனவு செய்துள்ளனர். 

இதன்மூலம், 415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளனர் என கமநல   அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .