Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 22 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு, ரிஷாட் பதியுதீன் 500 மில்லியன் ரூபாயை வழங்கவேண்டும் என, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.
பூண்டுலோயா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியை, அமைச்சர் இன்று (22) திறந்து வைத்தார்.
இதன்போது, மீள்குடியேற்ற நடவடிக்கையின்போது, பசில் ராஜபக்ஷவும் மரங்களை வெட்டினார் என, ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரிஷாட் பதியுதீன் என்பவர் நீதிபதி கிடையாது. வில்பத்து விவகாரத்துக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும். அவர் தொடர்பிலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவர் செயற்படக்கூடாது. மற்றையவர்கள் மீது குற்றஞ் சுமத்துவதற்கும் முற்படக்கூடாது. வில்பத்து வனத்தை மீளக்கட்யெழுப்ப, 500 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு கோருகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றத்தின்போது, பசில் ராஜபக்ஷ சட்டபூர்வமாகவே செயற்பட்டுள்ளார் என்றும் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், தவிநெகும, மகநெகும என நாட்டைக்கட்டியெழுப்பும் திட்டங்களையே அவர் முன்னெடுத்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரிஷாட் பதியுதீன் என்ன செய்தார் என்று கேள்வியெழுப்பிய அவர், அவரின் குடும்ப பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மன்னாரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதேவேளை, கடந்தகாலத்தில் எங்கே மீள்குடியேற்றம் நடந்தது என்பது தொடர்பான தகவல்களும் வெளிவரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago