Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஜூன் 13 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு இருட்டு மடு கிராமத்தில், மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் மா மரத்திலிருந்து தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வெள்ளையன் சண்முகநாதன் என்ற 51 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கையின் பிரகாரம், அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்னாரது இறுதி கிரியைககள் இன்று (13) இடம்பெற்றதுடன் சடலமும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago