Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு பொலிஸ் பிரிவுகளிலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்ட 58 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சான்றிதழ், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வு, நேற்று (28) பிற்பகல் 2 மணிக்கு, கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், போதையில் வாகனம் செலுத்துதல், சிறுகுற்றங்கள், பெரும் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களே கௌரவிக்கப்பட்டனர்.
இதில், வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்த்தன, வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .