2025 மே 19, திங்கட்கிழமை

668 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இந்தாண்டில் 668 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி எஸ். நிலாந்தன் தெரிவித்தார்.

கடந்த வருடம் தமது திணைக்களத்தால் மேற்கோள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் எமது சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தமாக 668 வியாபார நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டனவெனத் தெரிவித்தார்.

“காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருள்களை விற்பனை  செய்தமை, விலைகாட்சிப்படுத்தாமல் பொருள்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ளசுட்டுத்துண்டுகளில் திரிவுகளையும் மாற்றங்களையும் செய்தமை, போலித் தயாரிப்புகள் மற்றும் SLS(Srilanka standards) குறியீடற்ற தரமற்ற பொருள்களை விற்பனை செய்தமை, மின்சார, இலத்திரனியல் பொருள்களை உத்தரவாத சீட்டு(Warranty card/ Guaranty card) வழங்கப்படாமல் விற்பனை செய்தமை, வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதிப் பணத்துக்கு பதிலாக இனிப்புப் பொருள்களை வழங்குகின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக எம்மால் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன” என்றார்.

கடந்த வருடத்தில் நிலுவையாக இருந்த வழக்குகள் உட்பட மொத்தமாக 620 வழக்குகளுக்கு, சட்ட நடவடிக்கைகளின்பின்னர் 25,48000 ரூபாய் நீதிமன்றால் அபராதமாக விதிக்கப்பட்டது. 

தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ந்தும் எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேவேளையில், பொதுமக்களும் பாவனையாளர்களும் பொருள்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்து மூலமாக மாவட்ட செயலகத்தில் உள்ள எமது கிளையில் வழங்க முடியும். தவிரவும் 1977 என்ற உடனடி தொடர்பு இலக்கத்துக்கும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்கமுடியும் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X