Niroshini / 2021 மே 24 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில், தற்போது வரை 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களில், 23 நபர்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடையாளங்காணப்பட்டவர்கள், ஏற்கெனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களாகவும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாகவும் காணப்படுகின்றனரென்றார்.
அத்துடன், இந்த மாதம் தற்போது வரை 2,072 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவற்றில் 412 பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.
மேலும், மன்னார் - தாரபுரம். துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திநற்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில், தற்போது வரை 80 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும், அவர் தெரிவித்தார்.
இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்களெனவும், இவர்கள் அனைவரும் இந்த வார இறுதியில் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல உள்ளனரெனவும், வினோதன் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025