Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 18 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ9 - வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 - வீதி பூனாவ பகுதியில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்காக நாய் சென்றுள்ளது.
இதன்போது ஏற்படவிருந்த விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாரதி வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து பூனாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .