2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கரை கிராமத்துக்கு குடிநீர் விநியோகம்

George   / 2016 மே 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டைமானாறு அக்கரை கிராமத்துக்கான குடிநீர் விநியோகம், உத்தியோகபூர்வமாக கோப்பாய் பிரதேச செயலர் மருதுலிங்கம் பிரதீபனால் இன்று வியாழக்கிழமை (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அக்கரை கிராமம் ஒரு கடலோர கிராமமாக காணப்படுவதால் இங்குள்ள மக்கள் குடிநீரை பெறுவதற்கு நீண்டதூரம் செல்லவேண்டியிருந்தது. இக் கிராமத்துக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய தேவை குறித்து, இப்பகுதி மக்களால் பிரதேச செயலருக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதன் ஏற்பாடாக தொண்டைமானாறில் அமைந்துள்ள நீர்த்தாங்கியிலிருந்து, குடிநீர் விநியோகம் செய்து தருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உறுதியளித்திருந்தது.

53 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்துக்கான நீர் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீஜெயராசா, சமுர்த்தி உத்தியோகத்தர் வீ.சத்தியசீலன், கிராமஅலுவலர் எஸ்.கார்தீபன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X