2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’அகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில், கிரவல் மற்றும் மணல் அகழ்வுக்கான எந்தவித அனுமதிகளும் தற்போது வழங்கப்படவில்லையென, துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.லதுமீரா தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், துணுக்காய் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு கிரவல், மணல் என்பன கொண்டு செல்வதற்கான அனுமதிகளோ அல்லது அகழ்வுகளுக்கான அனுமதிகளோ வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

பிரதேசத்தில், வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைகளுக்காக குறிப்பிட்ட பயனாளிகளுக்கு ஒரு நாளுக்கான அனுமதி மாத்திரமே வழங்கப்படுகின்றனவெனவும், அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .