Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - அக்கராயன் ஆற்றின் துப்புரவுப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும் என, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு தெரிவித்துள்ளர்
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அக்கராயன் குளம் வான்பாயும் போது ஏற்படுகின்ற வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அக்கராயன் ஆற்றில் காணப்படுகின்ற பற்றைகளை அகற்றுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளது என்றார்.
அதாவது, 'ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ், அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்தத் திட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 4,113,105.00 ரூபாவை வழங்க திறைசேரி அனுமதி பெறப்பட்டிருப்பதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க ஊடாக அண்மையில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் கூறினார்.
"இதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய கேள்வி கோரல்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும்.
"அக்கராயன்குளம் வான்பாயும்போது, வழிந்தோடும் நீர் பெருக்கெடுத்து ஒவ்வொரு வருடமும் பெருமளவு வயல்நிலங்கள் அழிவடைவதைத் தடுக்கும் வகையில், வழிந்தோடும் நீர் பாயும் அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், எதிர்வரும் காலங்களில் அக்கராயன்குளம் பெருக்கெடுக்கும்போது பயிர்ச்செய்கை நிலங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உட்படாது" என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago