Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பதிவுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை இடர்மிகுந்த இடமாக, அக்கராயன் தாழ்பாலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கராயன் குளம் நிரம்பி வான் பாய்கின்ற போது, திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் அமைந்துள்ள தாழ்பாலத்தை மூடி வெள்ளம் பெருக்கடுக்கும். இதன் காரணமாக, மூன்று நாள்களுக்கும் மேலாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டிருக்கும். இதனால், குறித்த பாலம் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பதிவுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை இடர்மிகுந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெறுகின்ற கூட்டங்களில், குறித்த பாலத்தை மேம்பாலமாக மாற்றுமாறு பொது அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தப் பாலத்தை மாற்றி புனரமைப்பதற், 70 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இனிவருங்காலம் மழை காலம் என்பதால், குறித்த பாலம் மேம்பாலமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
குறித்த பாலம் மேம்பாலமாக மாற்றமடைவதால், முல்லைதீவு, கிளிநொச்சி கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .