Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2,790 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் என நேற்று (22) இடம்பெற்ற சிறுபோக குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் சி.சத்தியசீலன், பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியமெனவும் குறிப்பிட்டார்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வரட்சியான சூழலை எதிர்கொண்டதாகத் தெரிவித்த அவர், பயிர்ச் செய்கைகள் கூட பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனவெனவும் இந்நிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றனவெனவும் தெரிவித்தார்.
குளங்களின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அக்கராயன்குளத்தின் கீழ் 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago