2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணி நகர சபைக்கு உரித்தானதல்ல’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகர மத்தியில், பொது மலசலகூடத்துக்கு அருகாமையில் உள்ள காணியை சிலர் அடாத்தாகப் பிடித்து மதில் கட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் காணி, நகரசபைக்குச் சொந்தமானது இல்லையெனத் வவுனியா நகர சபை தவிசாளர் இ.கௌதமன், அது அரச காணியே எனவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இந்தக் காணி அரச காணியெனவும் அது, நகரசபைக்கு உரித்தானதல்லவெனவும் கூறினார்.

அவ்வாறு அது எவருக்கும் உரித்தில்லையாயின், நகரசபை தனதாக்கி கொள்ளுமெனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், நகர சபை உறுப்பினர் டி. கே. இராசலிங்கத்திடம் கேட்டபோது, அடுத்த சபை அமர்வு, நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளதாகவும் இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் சபையில் விவாதிப்பேனெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .