2025 மே 22, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – பேசாலை, வெற்றிமாங்குடியிருப்பு 50 வீட்டுத் திட்டம் பிரதான வீதி   வடக்கு கடற்கரை அண்டி பகுதியில் 'அடைக்கல அன்னை சிற்றாலயம்' அமைக்க நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஒதுக்கிய   50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு, பேசாலை கட்டுமான தொழிலாளர்கள் சங்கம், மீனவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த சிற்றாலய கட்டுமான பணிக்கான அடிக்கல் நடும் வைபவம் இடம்பெற்றது. 

பேசாலை பங்குத்தந்தை அருட்தந்த தேவராஜா கொடுத்தோர் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்   சட்டத்தரணியுமான எஸ்.பிரிமுஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான கொன்சல் குளாஸ், திருமதி கிறிஸ்டி சின்னராணி குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X