சண்முகம் தவசீலன் / 2018 ஏப்ரல் 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொலுத்தீன் பையுடன் அரைகுறை துணிகளுடன் அடித்துக்கலைக்கப்பட்ட இனமாக தமிழினம் காணப்படுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோரயுத்தத்தால் மூன்று தசாப்தங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்களின் வேண்டுகைகள் 36 ஆயிரம் கோவைகளாக கொழும்பில் தேங்கி இருந்து எல்லோருக்கும் தெரியும். போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறு எண்ணிக்கையாகவே இது காணப்படுகின்றது
இங்கு வாழ்கின்ற மக்கள் ஒட்டுமொத்த சொத்துக்களை இழந்தவர்கள். செட்டிகுளம் முகாமுக்கு செல்லும்போது பொலுத்தீன் பையுடன் அரைகுறை துணிகளுடன் அடித்துக்கலைக்கப்பட்ட இனமாக தமிழினம் உள்ளது. அதனை மீள் புனரமைப்பு செய்வதற்கு மீள்குடியேற்ற அமைச்சு முன்வந்துள்ளது. அமைச்சின் தலைமையில் உள்ளவர் ஒரு தமிழர் என்றவகையில், அவருக்கு அந்த பொறுப்பு உள்ளது அதனை அவர் செய்துகொண்டிருக்கின்றார். அவர்கள் இதனை தொடரவேண்டும். சிறு தொகையாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறு வட்டியிலான கடன்கள் வழங்க திட்டம் உள்ளது என்று கூறியுள்ளனர். அவற்றுக்கான முயற்சிகளை எடுங்கள். அதனை உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மட்டும் பயன்படுத்துங்கள். கிடைக்கும் உதவிகளை கொண்டு உங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்வீர்களாக இருந்தால், அதனால் எந்த பயனும் கிடைக்காது. கிடைக்கும் உதவியினை வைத்துக்கொண்டு சிறு தொழில்களை தொடங்குங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்வு மேம்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago