2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் சுகாதார நிலையம்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட புன்னைநீராவி  அ.த.க.பாடசாலைக்கு அருகில் இயங்கி வரும் புன்னைநீராவி ஆரம்ப சுகாதார நிலையம் போதிய அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கி வருவதால், அங்கு சிகிச்சை பெற்றுவரும்  நூற்றுக்கணக்கான கற்பவதி தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் எனப் பலரும் பல இடர்களை  எதிர்கொண்டு வருகின்றார்கள். 

இந்தச் சுகாதார நிலையத்துக்கு வருகை தரும் பலரும் தண்ணீர் வசதிகள் சீரின்மையினால்  வளாகத்திலுள்ள ஆழ் கிணற்றில் மிக அந்தரமான சூழலில் வாளி மூலம் தண்ணீர் அள்ளுவதை அவதானிக்க முடிகின்றது.

மலசலக்கூட வசதி, குடி நீர் வசதி.மகப் பேற்று தாய்மார்களுக்கான பரிசோதனை ஆகியவற்றுக்கு நீரைப் பெறுவதில் பல்வேறு கஷ்டங்களையும் உபாதைகளையும் தொடர்ந்து அனுபவித்து வருவதுடன்,  நீரை கிணற்றிலிருந்து குழாய் மூலம் பெற ஐந்து தண்ணீர் பைப் வசதிகள் இருந்தும் அந்த நீர் பெறும் குழாய்கள் பல வருடமாக புனரமைப்பு செய்யப்பட்டு வழங்கப்படாதமையால் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தண்ணீர்  தாங்கி அமையப்பட்டிருந்தும் அந்ந தண்ணீர்  தாங்கியை சுற்றிபற்றைகள் வளர்ந்து காணப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X