Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பூனகரி கறுக்காய்த்தீவு கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மையால் சுமார் 168க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
கிளிநொச்சி புநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கறுக்காய் தீவு கிராமத்தில் தற்போது 60 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக 168க்கும் மேற்பட்ட வரையான வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த கிராமத்துக்கான குடிநீர் முதற்கொண்டு ஏனைய வசதிகள் வரை எல்லாவற்றையும் வேறு இடங்களில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதிக்கான பிரதான வீதியாக காணப்படும் தம்பிராய் சந்தியிலிருந்து கறுக்காய் தீவு வரையான வீதி கடந்த பல ஆண்;டுகளாக எதுவித புனரமைப்புப் பணிகளும் இன்றி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் தற்போது சாதாரமாக துவிச்சக்கரவண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
எனவே தமது கிராமத்துக்கான பிரதான போக்குவரத்து வீதி புனரமைத்தல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago