2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதிசய கடல்வாழ் உயிரினம் கரையொதுங்கியது

George   / 2016 நவம்பர் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தாழ்வுபாடு கடலோரப்பகுதியில் உயிரிழந்த நிலையில், பாரிய கடல் வாழ் உயிரினம்  ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த உயிரினம், கடல் பன்றி எனவும்  சுமார் 5 அடி நீளமும் 450 தொடக்கம் 500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் வித்தியாசமான ஓர் உயிரினம் இறந்த நிலையில், மிதந்து வந்ததைக் கண்டு, கடற்படையினர் அதனை மீட்டுள்ளனர்.

இதன்போது, மன்னார் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்  சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

உயிரிழந்தது முளையூட்டியான 'ஆபிரியா' எனப்படுகின்ற ஓர் கடல் வாழ் உயிரினம் என அறிய முடிகின்றது. குறித்த கடல் வாழ் உயிரினத்தை கடற்படையினர், கடற்கரையில் புதைத்து விட்டதாக அறிய முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .