2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அதிக வட்டியால் அவதியுறும் வர்த்தகர்கள்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், அதிக வட்டிக்கு பணம் பரிமாறப்பட்டு வருவதால், பல வர்த்தகர்கள் சிக்கல் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா நகர்ப் பகுதியில், வர்த்தக நிலையங்களை நடத்தும் வர்த்தகர்கள் பலர் பொருள் கொள்வனவுகளுக்காக பணத்தை கைமாறாகவும் வட்டிக்கு கொடுப்பவர்களிடமும் பணத்தை பெற்றுவரும் நிலையில், அவர்களினால் அதிகளவான வட்டி அறவிடப்படுவதாகவும் இதன் காரணமாக பொருளாதார சிக்கல் நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அதிகளவான வட்டி பெறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் பண பரிமாற்றம் செய்பவர்கள் தொடர்பாக, அரசாங்கம் பல சட்டங்களை கொண்டு வந்த போதிலும், அதனை வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில், பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பின்னிற்பதாகவும் குற்றஞ்சாட்டப்ட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .