Princiya Dixci / 2021 மார்ச் 25 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி, முக்கொம்பன் மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி, அப்பானசாலையிக் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களால், பாடசாலைக்கு முன்னால், இன்று (25) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில், இது தொடர்பில் பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மனுக்கள் மூலம் பெற்றோர்கள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பூநகரி பிரதேச செயலகத்தில், செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற கூட்டத்தில், பெற்றோர்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகள், பாடசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்ததுடன், இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட மோதும், ஆசிரியர்கள் ஒருவரும் பாடசாலைக்குள் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
வலயக் கல்விப் பணிப்பாளர் நேரில் வந்து தீர்வு தரும் வரை, இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என, ஆர்ப்பாட்டத்திம் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025